Wednesday, March 25, 2020

துங்கபத்ரா புஷ்கரம்


இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, பீமா வைகை, தாமிரபரணி மற்றும்  துங்கபத்ரா முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

புஸ்கரம்  தோன்றிய புராண கதை

இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.


துங்கபத்ரா புஷ்கரம்

துங்கபத்ரா நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பீமா, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்திரா, சிந்து, பிரணீதா) ஒன்றாகும். இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அதாவது குரு பகவான் தனுசு ராசியில் இருந்து  மகர ராசிக்குள் பிரவேசிக்கும் முதல் பனிரெண்டு நாட்கள் மற்றும் கடைசி  பனிரெண்டு நாட்கள் துங்கபத்ரா புஸ்கரம் கொண்டாடப்படுகிறது.

குரு பகவான் மகர ராசிக்குள் வரும் மார்ச் மாதம் வந்து சிறிது காலம் இருந்து மீண்டும் தனுசு ராசிக்குள் பிரவேசிப்பார்.  இது வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 12 நாள்கள் துங்கபத்ரா ஆதி புஷ்காரமாகவும்.  மீண்டும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வரை அந்திம புஸ்கரமாகவும் கொண்டப்படுகிறது.  இந்த காலங்களில் குரு பகவான் துங்கபத்ரா ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு (2020) வரும் துங்கபத்ரா புஷ்கரமானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா துங்கபத்ரா புஷ்கரம் ஆகும்.

 துங்கபத்திரா ஆறு

 கர்நாடக மாநிலத்திலிருந்து தெலுங்கானா வழியாக ஆந்திரா  மாநிலம் வரை பாயும் இந்த ஆறு துங்கபத்திரா ஆறு என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான புனித ஆறாக கருதப்படுகிறது. ஹம்பி நகரம் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் துங்கபத்திரா புஷ்கரம் நடைபெறும் சில முக்கிய இடங்கள் வருமாறு:–
  1. Shri Jogulamba Temple- Alampur- Gadwal district.
  2. Sangemeshwar Temple- Alampur - Gadwal District. 
  3. Waddepalle- Gadwal District.
  4. Manopad, Jogulamba Gadwal
  5. Rajoli, Mahabubnagar
  6. Venisampur Ghat, Aiza Mandal, Jogulamba Gadwal
  7. Pullikal Ghat, Aiza Mandal, Jogulamba Gadwal
  8. Beechupally Ghat, Mahbubnagar
  9. Juraala, Gadwal
  10. Beerelly, Gadwal Mandal
  11. Atmakur, Jogulamba Gadwal.
 கர்நாடகா மாநிலத்தில் துங்கபத்திரா புஷ்கரம் நடைபெறும் சில முக்கிய இடங்கள் வருமாறு:
  1. Koodli, Shimoga
  2. Chikmagalur/ Chickmangalore
  3. Sri Kshetra Shringeri, Chickmangalore
  4. Sri Parshwanath Swamy Basadi, Sringeri
  5. Hornadu, Chikkamagaluru
  6. Kalasa, Chikkamagaluru
  7. Charmadi Ghat, Chikkamagaluru
  8. Kottigehara, Chikkamagaluru
  9. Kottigehara, Chikkamagaluru
  10. Narasimharajapura, Chikkamagaluru
  11. Amruthapura, Chikkamagaluru
  12. Belavadi, Chikkamagaluru
  13. Ayyanakere, Sakharayapatna
  14. Thirthahalli, Shimoga
  15. Aghoreshwara temple, Ikkeri
  16. Harapanahalli, Ballari
  17. Neelagunda, Ballari
  18. Huvina Hadagali, Ballari
  19. Hagaribommanahalli, Ballari
  20. Hosapete/ Hospet, Ballari
  21. Siruguppa, Bellary
  22. Koppala, Koppala district
  23. Chitradurga, Chitradurga district
ஆந்திர  மாநிலத்தில் துங்கபத்திரா புஷ்கரம் நடைபெறும் சில முக்கிய இடங்கள் மற்றும் கோவில்கள் வருமாறு:
  1. Moola Brindavana of Guru Raghavendra Swamy -Mantralayam,
  2. Dakshina Shirdi  , Kurnool
  3. The Sangameswaram Temple , Kurnool
தெலுங்கானா மாநிலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சில முக்கியமான கோவில்கள்.
  1. Jogulamba Temple, Alampur.
  2. Navabrahma Temples, Alampur.
  3. Sri Ranganayaka Swamy, Srirangapur.
  4. Sangameshwara Temple, Kudavelli, Alampur.
  5. Sri Meenakshi Agasteswara Swamy Temple, Wadapally.
  6. Sri Lakshmi Narasimha Swamy Temple, Wadapally.
  7. Vaikunta Narayana Swamy Temple, Rajoli.
  8. Lord Hanuman Temple, Uppal.
  9. Shiva Aalayam, Uppal.
  10. Anjaneya Swamy Temple , Beechupally.
கர்நாடகா மாநிலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சில முக்கியமான கோவில்கள்.
  1. Rameshvara Temple , Koodli, Sangama.
  2. Chintamani Narasimha, Koodli.
  3. Shiva Temple,  Koodli.
  4. Hari Hara Temple, Koodli.
  5. Sri Vidyashankara Temple, Chickmangalore.
  6. Sharadamba Temple, Sringeri.
  7. Sri Malahanikareshwara Temple, Sringeri.
  8. Sri Rishyashringeshwara Temple, Kigga.
  9. Annapoorneshwari Temple , Horanadu.
  10. Shri Mahaganapati Subrahmanyeshwara Temple, Kalasa.
  11. Shri Chenakeshava Temple, Balehole, Chickmangalore.
  12. Valmika Ranganathaswamy Temple, Narasimharajapura.
  13. Simhanagadde Jwalamalini Temple, Narasimharajapura.
  14. Someshwara Temple, Sompur.
  15. Amrutesvara Temple, Amruthapura.
  16. Kodanda Ramaswamy Temple, Hiremagalur.
  17. Veera Narayana Temple, Belavadi.
  18. Sri Channakeshava & Sri Siddeshwara Temple.
  19. Ukkadagathri Ajjayya Swami, Hampapura.
  20. Deviramma Temple, Bindiga.
  21. Nirvanaswamy Temple, Mavinahalli.
  22. Seethālayanagiri Temple, Chikmagalur.
  23. Sri Markandeshwara Temple, Khandya.
  24. Sri Durgaparameshwari Temple, Melpal.
  25. Sri Rameshwara Temple, Thirthahalli.
  26. Tripurantakesvara temple, Balligavi.
  27. Huccharaya Swamy temple, Shikaripur.
  28. Keladi, Sagara – Rameshwara Temple.
  29. Bheemeshwara Temple, Nilagunda.
  30. Keshavaswami Temple , Huvina Hadagali.
  31. Anjaneya Temple , Yenigi.
  32. Virupaksha Temple,Hampi.
  33. Mahadeva Temple , Itagi,  Koppal.
  34. Siddalingeshwara Temple, Chitradurga . 

மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது துங்கபத்திரா நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், துங்கபத்திரா புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (மார்ச் 30 முதல் ஏப்ரல் 10 வரை)- அல்லது  (நவம்பர் 20 முதல்  டிசம்பர் 1 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்.....

நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!



- Dr. P.V. Praveen Sundar MCA,M.Phil (CS), Ph.D (CS)